நடிகர் பார்த்திபன் '144' என்ற தலைப்பில் கவிதை இணைய இதழை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”2020 மார்ச் 23ல் ஊரடங்குச் சட்டம் வந்ததிலிருந்து கன்னா பின்னா கற்பனைகள் பலதைப் பற்றி ஒரு ஊடக நண்பர் கேட்டார்.
தலையில் பாக்கியிருந்த கிட்னியை வைத்து பார்த்திபன் உருவாக்கிய '144' - பார்த்திபன்
என் தலையில் பாக்கியிருக்கும் கிட்னியைக் கொண்டு '144' என்ற தலைப்பில் கவிதையை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.
“உங்கள் கிறுக்கல்களைப் பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து அதைக் கவிதையாக் காட்டி டீனேஜ் பசங்க இன்னமும் லவ்வுராங்க. அந்த மாதிரி Simple & Sweet-ஆ சில கவிதை எழுதுங்களேன். இந்த 144-ல்”! அதையே தலைப்பாக்கி, தலையில பாக்கியிருக்கும் கிட்னியைக் கொண்டு சில ஐட்டங்கள் எழுதியுள்ளேன் படித்து பாருங்கள் பாராட்டுங்கள்.
144-ல் உயிரையும் பொருட்படுத்தாது ,பணியாற்றும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டு கூடவே ஜாலியா ஒரு புத்தகம் என்று அதில் கூறியுள்ளார்.