இந்தியில் அமிதாப் பட்சன், டாப்ஸி இருவரும் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் 'பிங்க்'. இப்படத்தை தமிழில் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' என்னும் தலைப்பில் வினோத் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று வெளியானதை அடுத்து பலரும் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதன் முறையாக அஜித் இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அஜித் ரசிகனில் நானும் ஒருவன்: பார்த்திபன் ட்வீட் - பிங்க்
அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்த்த பின், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அஜித்தை பாராட்டி ட்விட்டரில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் 'நேர்கொண்ட பார்வை' படத்தை பார்த்த பின் நடிகர் பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "நேரு கொண்ட பார்வை, காங்கிரஸ் கொண்ட பார்வை, பிஜேபி கொண்ட பார்வை, காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக ஒரு நல்ல கருத்தை சொல்ல இப்படத்தை ஒப்புக்கொண்ட அஜிக் அவர்களை பாராட்ட அவரின் தலையாய ரசிகர்களோடு நானும்"! என்று கூறியுள்ளார்.
அஜித்-பார்த்திபன் இணைந்து 'நீ வருவாய் என' படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.