தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஆயிரத்தில் ஒருவன்' அல்ல; ஒருவனுக்குள் ஆயிரம் - பார்த்திபன் பகிர்ந்த காணொலி - செல்வராகவன் படம்

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இடம்பெற்ற பாடலை மறு வடிவாக்கம் செய்து வேறு பாடலுடன் ஒப்பிட்டுள்ள ரசிகர்களின் காணொலியை நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

Parthiban
Parthiban

By

Published : Feb 3, 2020, 3:08 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென், பிரதாப் போதான் உள்ளிட்டோர் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி திரைப்பட ரசிகர்களால் இன்றுவரை பேசப்பட்டுவரும் படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

சோழர் காலத்து பழம்பெருங் காவியத்தை கற்பனையாக வடிவமைத்த இந்தப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதில் சோழ அரசனாக நடித்து அசத்தியுள்ள நடிகர் பார்த்திபனின் நடிப்பு விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.

காலம் கடந்து இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டுவரும் இந்தப் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் இடம்பெற்ற காட்சியமைப்புகள், பாடல்கள் என அனைத்துமே கற்பனைக்கு எட்டாதது.

ஆயிரத்தில் ஒருவன்

அந்தப் படத்தில் சோழ அரசனாக நடித்துள்ள பார்த்திபன் ஒரு பாடலில் ருத்ரதாண்டவம் ஆடி பிரமிப்பை ஏற்படுத்தியிருப்பார். இந்த நிலையில், அந்தப் பாடலை தற்போதைய காலகட்டத்தில் வெளியாகியுள்ள சில குத்துப் பாடல்களுக்கு ஏற்றார்போல மறுவடிவாக்கம் செய்து இணையவாசிகள் வெளியிட்டிருந்தனர். இதனைப் பலரும் பாராட்டியதோடு, அதிகளவில் பகிர்ந்துவந்தனர்.

இதனிடையே தற்போது அந்தக் காணொலியைப் பகிர்ந்து வியந்துபோன நடிகர் பார்த்திபன் நானா இது என்ற பாணியில் அதனைப் பாராட்டி பகிர்ந்திருக்கிறார். அவரது ட்வீட் பதிவில், ஆச்சர்யப்படும்படியான திறமை! அங்க அசைவுக்கு ஏற்றாற்போல பாடலை இசைப்பது! அருமை எனக் குறிப்பிட்டுள்ளார். அதனை மேற்கோள்காட்டி, ட்வீட் செய்துள்ள ரசிகர்கள் பலரும் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் பல விருதுகளை வென்று சாதனை படைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

'தர்ஷன் மேல தப்பு இருக்கு' - சனம் ஷெட்டிக்கு அட்வைஸ் செய்த காஜல்

ABOUT THE AUTHOR

...view details