தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நிவின் பாலியின் 'படவெட்டு' பட போஸ்டர் வெளியீடு! - Latest mollywood news

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் 'படவெட்டு' படத்தின் போஸ்டர், தற்போது வெளியாகியுள்ளது.

நிவின் பாலி
நிவின் பாலி

By

Published : Jul 19, 2020, 3:52 PM IST

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர், நிவின் பாலி. இவர் தமிழில் இரண்டு படங்கள் தான் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்குக் கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது மலையாளத்தில் 'படவெட்டு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்க, மலையாள நடிகர் சன்னி வேய்ன் தயாரிக்கிறார்.

மேலும் நடிகை அதிதி பாலன், மஞ்சு வாரியர் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு '96' பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை நடிகர் நிவின் பாலி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் போராட்டம் நிறைந்த களத்தில் நடிகர் நிவின் பாலி அமர்ந்துகொண்டு இருப்பதுபோல் உள்ளது. இதன்மூலம் இப்படம் சமூக அக்கறை கொண்ட விஷயத்தைப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. மேலும் விரைவில் படத்தின் கூடுதல் அப்டேட் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details