மலையாள திரையுலகின் மாஸ் ஹீரோவான நிவின்பாலி தற்போது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடித்துவருகிறார். 'லவ் ஆக்ஷன் ட்ரமா', 'வைரஸ்' படங்கள் இவர் கைவசம் உள்ளன.
நிவின்பாலியின் 'துறைமுகம்' பணிகள் தொடக்கம்...! - நிமிஷா சஜயன்
நிவின் பாலியின் புதிய படமான 'துறைமுகம்' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ராஜீவ் ரவி இயக்கும் புதிய படமான 'துறைமுகம்' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியுள்ளது. இப்படம் கன்னூரிலும் கொச்சியிலும் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுக பகுதியை ஒட்டியுள்ள மக்களின் வாழ்க்கையை பற்றிய படம் இது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்க உள்ளார். மேலும் இவர்களுடன் பிஜு மேனன், இந்திரஜித், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வெகு நாட்களுக்கு பின் பூர்ணிமா இந்திரஜித் இப்படத்தின் மூலம் மலையாள திரைக்கு திரும்புகிறார்.