கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும் கங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதி என்பவருக்கும் பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. திருமணத்தை குமாரசாமி தனது சொந்த தொகுதியான ராம் நகராவில் நடத்த முடிவு செய்துள்ளார்.
இந்த நிச்சயதார்த்த வீடியோவை நிகில் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதில் நிகிலின் தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்துகொண்டார். மேலும் பல அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.