தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெண்கள் மட்டும் பணியாற்றும் நடமாடும் டீக்கடையை திறந்து வைத்த நாசர்!

சென்னை: நடிகர் நாசர் பெண்களால் இயக்கப்படும் நடமாடும் டீ கடையை திறந்து வைத்தார்.

பெண்கள் மட்டும் பணியாற்றும் நடமாடும் டீக்கடையை திறந்து வைத்த நாசர்!
பெண்கள் மட்டும் பணியாற்றும் நடமாடும் டீக்கடையை திறந்து வைத்த நாசர்!

By

Published : Mar 1, 2020, 4:39 PM IST

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாசர், ஜஸ்வர்யா ராஜேஷ், விஜிபி சந்தோசம் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ மூலம், டீ மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் பெண்கள் மட்டுமே பணியாற்றுவதால், அவர்களுக்கு சமூக பொறுப்புள்ள தொழிலை நடத்துவதற்கான நம்பிக்கை கிடைக்கும் என்று கில்லி ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மட்டும் பணியாற்றும் நடமாடும் டீக்கடையை திறந்து வைத்த நாசர்!

தொடர்ந்து பேசிய வில்லியம், ‘கில்லி சாய் ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற 50 ரெட்ரோ ஃபிட் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்களில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்க முடியும். இதன்மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள 2000க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:சல்மான்கானின் ராதே ரிலீஸ் தேதி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details