தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

65 வயதில் தனது அறுபதாவது ஆண்டு விழாவை துள்ளலுடன் கொண்டாடும் கமல் - நாசர் - கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்

65 வயதில் தனது அறுபதாவது ஆண்டு விழாவை அதே துள்ளலுடன் நடிகர் கமல்ஹாசன் கொண்டாடுகிறார் என்று நாசர் கூறியுள்ளார். கமலை நாம் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்து வடிவிலும் பார்த்துள்ளோம். தற்போது சிறந்த தலைவராகவும் பார்த்து வருகிறோம் என்று நடிகர் ரமேஷ் அரவிந்து புகழ்ந்துள்ளார்.

பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் நாசர் பேச்சு

By

Published : Nov 8, 2019, 3:18 PM IST

65 வயதில் தனது அறுபதாவது ஆண்டு விழாவை கொண்டாடும் கமல் - நாசர்

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன அலுவலகத்தில், மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் திருஉருவ சிலையை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், சந்தானபாரதி, நடிகர் நாசர், ரமேஷ் அரவிந்த், கவிப்பேரரசு வைரமுத்து, பாலசந்தர் குடும்பத்தினர் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் நடிகர் நாசர் பேசுகையில், "இது ஒரு குடும்ப விழா. 65 வயதில் தனது அறுபதாவது ஆண்டு விழாவை அதே துள்ளலுடன் நடிகர் கமல்ஹாசன் கொண்டாடுகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தவர். படப்பிடிப்பு தளத்தில் நடிப்பு வேலையை தவிர எந்தவொரு கிசுகிசு உள்ளிட்ட எந்தப் பேச்சுக்கும் இடம் இருக்காது. இயக்குநர் கே. பாலசந்தருக்கு மரியாதை செய்யும் வகையில் நடிகர் கமல் முதலில் இந்தப் பணியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

இதில் இயக்குநரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் பேசியதாவது:

எனக்கு சினிமா மீது ஒரு காதல் வருவதற்கு ரஜினி, கமல் போன்றவர்கள்தான் காரணம். பாலச்சந்தர், கமல் இடையேயான உறவு என்பது மிகவும் அற்புதமானது. கமல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவர் கே. பாலசந்தர்.

கமல் பேச்சு, செய்கை என அனைத்திலும் கே. பாலச்சந்தர் சாயல் உள்ளது. அந்த மரியாதையின் காரணமாகத்தான் அவரது குருவுக்கு கமல் சிலை வைத்துள்ளார். அதிலும் அவரது அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது.

கமலை நாம் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்து வடிவிலும் பார்த்துள்ளோம். தற்போது சிறந்த தலைவராகவும் பார்த்துவருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details