நடிகர் நகுல் என்ற நகுலன் நடிப்பது மட்டுமின்றி, பின்னணிப் பாடகராகவும் வலம்வருகிறார். இவர் நடிகை தேவயானையின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நகுல், அதேபடத்தில் பாடலும் பாடியுள்ளார்.
ஸ்லிம்மாக மாறிய நகுல்:
முதல் படத்தில் மிகவும் கொழு கொழுனு இருந்த இவர், அடுத்த சில ஆண்டிலேயே ’காதலில் விழுந்தேன்’ படத்தில் மிகவும் ஒல்லியாக மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவந்த இவர், கடந்த 2016ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான ஸ்ருதியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
கிச்சன் பெண்களுக்கு மட்டுமல்ல:
ஒருமுறை நடிகர் நகுல் பேட்டியில், “பெண்கள் மட்டும்தான் கிச்சனுக்கு செல்லவேண்டும் என்று இல்லை. நாமும் அவர்களுடன் சேர்ந்து உதவ வேண்டும்” எனக் கூறினார். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நானும், என் மனைவியும் இணைந்து தான் சமையல் வேலைகளை செய்வோம் எனத் தெரிவித்திருந்தார்.
அடுத்த இன்னிங்ஸ்:
இவர் ஏற்கனவே 2020ஆம் ஆண்டு Dance Vs Dance நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நிலையில், தற்போது மீண்டும் BB Jodigal நிகழ்ச்சியில் தற்போது நடுவராக உள்ளார்.
துறுதுறு நடிகர்:
பல திறமைகளை கைக்குள் அடக்கி வைத்திருக்கும் துறுதுறு நடிகர் நகுல் இன்று (ஜூன் 15) தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவருக்குச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் #HBDNakkhul #HappyBirthdayNakkhul ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
இதையும் படிங்க:மக்களுக்கு அள்ளிக் கொடுத்த மக்கள் செல்வன்