பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்! - நகுல் திரைப்படங்கள்
சென்னை: நடிகர் நகுல் - ஸ்ருதி தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
![பெண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் நகுல்! நகுல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:03:11:1596461591-tn-che-07-actornakkhul-babygirl-script-7204954-03082020183541-0308f-1596459941-1002.jpg)
நகுல்
'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானவர் நகுல். இவர், நடிகை தேவயானியின் சகோதரர் ஆவார். நகுல் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.