தமிழ்நாடு

tamil nadu

சட்டம் தன் கடமையைச் செய்தே ஆக வேண்டும் - எம்.எஸ். பாஸ்கர் ஆவேசம்

By

Published : Nov 16, 2021, 2:15 PM IST

Updated : Nov 17, 2021, 7:33 PM IST

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதைவிட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என நடிகர் எம்.எஸ். பாஸ்கர் அறச்சீற்றத்துடன் பேசியுள்ளார்.

bhaskar
bhaskar

கோயம்புத்தூரில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி முதலில் படித்த பள்ளியின் ஆசிரியர், அப்பளியின் முதல்வர் ஆகியோரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த வகையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இது குறித்து அவர், "இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாகத் தாக்கும் காணொலி.

தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டுத் தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதைவிட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது.

அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும், அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மகரிஷி வித்யா மந்திர், பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Last Updated : Nov 17, 2021, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details