தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வீட்டிலேயே இருங்கள்: இரு கரங்கள் கூப்பி எம்.எஸ். பாஸ்கர் வேண்டுகோள்

"தயவு செய்து அரசாங்கமும் பெற்றோர்களும் சொல்வதைக் கேளுங்கள். இந்த வைரஸை ஒழிக்க நீங்கள் வெளியே தேவையில்லாமல் சுற்றாமல் இருந்தாலே போதும். நீங்கள் வீட்டிற்குள் இருந்தால் நிச்சயமாக இந்த வைரஸை ஒழிக்கலாம். தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்"

Baskar
Baskar

By

Published : Apr 10, 2020, 12:38 PM IST

சென்னை: கரோனா தொற்று காரணமாக இளைஞர்களுக்கு எம்.எஸ். பாஸ்கர் இரு கரங்கள் கூப்பி வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரோனா தொற்று காரணாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டிற்குள் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களது ரசிகர்களையும் பொதுமக்களையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தங்களுடைய சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் அறிவுறுத்துகின்றனர்.

அந்தவகையில், தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ் பெற்ற எம்.எஸ். பாஸ்கர் இளைஞர்களுக்கு இரு கரங்கள் கூப்பி வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”நான் இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நிலைமை ரொம்ப சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படியாவது இந்த வைரஸைக் கட்டுபடுத்தி முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகிறது. காரணமே இல்லாமல் வெளியே சுற்றுவது, தேவையில்லாமல் காவல் துறையினருக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பது என்று நடந்துகொள்ளாதீர்கள். வீட்டில் அடங்கி இருங்கள். பெற்றோர்களுக்கு உதவியாக இருங்கள்.

இந்த வைரஸை ஒழிப்பதற்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லாம் சிறுபிள்ளைகளாக இருக்கிறீர்கள். உங்களை தகப்பன் ஸ்தானத்திலிருந்து என் இரு கரங்கள் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அரசாங்கமும் பெற்றோர்களும் சொல்வதைக் கேளுங்கள். இந்த வைரஸை ஒழிக்க நீங்கள் வெளியே தேவையில்லாமல் சுற்றாமல் இருந்தாலே போதும். நீங்கள் வீட்டிற்குள் இருந்தால் நிச்சயமாக இந்த வைரஸை ஒழிக்கலாம். தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்” என கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க: தயவு பண்ணி வெளிய வராதீக - கைகூப்பி கெஞ்சும் வடிவேலு

ABOUT THE AUTHOR

...view details