தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்களும் தினம்தோறும் அச்சத்திலேயே ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சையளித்து வந்த மருத்துவர் இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வாக்குவாதத்தில் ஈடுபட்டோருக்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, திரை பிரபலங்கள் பலரும் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கரும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வண்ணம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடவுளுக்கு அடுத்தப்படியாக இருக்கும் மருத்துவர்கள் கரோனா வைரஸ் ஆபத்திற்கு பயந்து மக்களுக்கு மருத்துவம் செய்யவில்லை என்றால் நாம் ஒவ்வொருவரும் அநாதை பிணம்தான் என்று தெரிவித்தார். மேலும் ஒரு குரங்கு இறந்தால் கூட நூறு குரங்குகள் அந்த இடத்திற்கு வந்து இறந்த குரங்கின் உடலை தூக்கிக்கொண்டு போகும். ஒரு குரங்குக்கு இருக்கும் அறிவு கூட மனிதனுக்கு இல்லை என்று தன் எதிர்ப்பு குரலை பதிவு செய்தார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர் வீடியோ பதிவு இதையும் படிங்க...'உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக்