சென்னை: திரைப்பட இயக்குனர்களை சாதிப் பெயரை சொல்லி மீரா மிதுன் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என நடிகர் எம்எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள்.
ஆனால் இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல.
வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம்.
சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது
இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்?
சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது?
பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் 'கலைஞானி' கமலஹாசன் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா?
ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது?
விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா?
"குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும்" என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?