தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்போ ரஜினி... இப்போ மோகன்லால் - மோகன்பாபு வீட்டில் கூடிய பிரபலங்கள் - மோகன்பாபுவின் படங்கள்

தெலுங்கு நடிகர் மோகன்பாபு வீட்டிற்கு, மலையாள நடிகர் மோகன்லால் தனது குடும்பத்தினருடன் இரவு விருந்துக்கு சென்ற புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Lakshmi
Lakshmi

By

Published : Aug 6, 2021, 8:07 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் மோகன்பாபு.

இவர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்குச் செல்லும் ரஜினி, அவ்வப்போது மோகன்பாபு வீட்டிற்குச் சென்று உணவருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி, படப்பிடிப்பை முடித்து விட்டு மோகன்பாபுவை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

இதனையடுத்து நடிகர் மோகன்லால் தனது குடும்பத்தினருடன் மோகன்பாபு வீட்டிற்கு இரவு விருந்திற்கு சென்றுள்ளார்.

அப்போது மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் மோகன்லாலுடன் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டனர். இப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: அசல் கேங்க்ஸ்டர்:வைரலாகும் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details