தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 30, 2021, 3:15 PM IST

ETV Bharat / sitara

'பார்வையிலிருந்து மறைந்தாலும் இதயத்தில் இருப்பார்' - கே.வி. ஆனந்த் மறைவுக்கு மோகன்லால் இரங்கல்

சென்னை: மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஒளிப்பதிவாளர் - இயக்குநர் கே.வி. ஆனந்துக்கு நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Mohanlal
Mohanlal

இயக்குநர் கே.வி. ஆனந்த் இன்று (ஏப்ரல் 30) காலை மாரடைப்பால் காலமானார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகர் மோகன் லால் கூட்டணியில் உருவாகிய 'தேன்மாவின் கொம்பத்', 'மின்னாரம்', 'சந்திரேலேகா' உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இதில் 'தேன்மாவின் கொம்பத்' படத்தில் ஒளிப்பதிவாளராக கே.வி. ஆனந்த் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசியவிருதை கே.வி. ஆனந்த் வென்றார். கடைசியாக கே.வி. இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' படத்திலும் மோகன்லால் பிரதமராக நடித்திருந்தார்.

இந்நிலையில், மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நம் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். ஆனால் எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். கே.வி. ஆனந்த் சார் நீங்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவீர்கள். அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details