தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விபரீதத்தை தடுக்க பிரபல நடிகரை வீட்டுகாவலில் வைத்த போலீஸ்...! - திருப்பதி

தெலுங்கில் புகழ்பெற்ற நடிகரும், கல்விக் குழுமங்களின் தலைவருமானவர் டாக்டர். மோகன் பாபு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

File Pic

By

Published : Mar 22, 2019, 10:01 PM IST

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி ஆட்சியிலிருந்தபோது, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவித்தார். அவரை அடுத்து ஆட்சிக்கு வந்த மற்ற கட்சிகளும் இதையே பின்பற்றி வருகின்றது. இதனால் கல்லூரிகளுக்கு அரசு தரவேண்டிய தொகையின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் சில கல்லூரிகள் கல்வி கட்டணத்தை மாணவர்களையே செலுத்த சொல்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதியில் 'வித்யாநிகேதன்' என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுக்கு அரசு 20 கோடி ரூபாயை ஆந்திர அரசு செலுத்த முன்வராததைக் கண்டித்து மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். மோகன் பாபு மற்றும் கல்லூரி மாணவர்களைக் கல்லூரி வளாகத்திலிருந்து வெளியே வர முடியாதபடி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மோகன் பாபு, மாணவர்களின் கட்டணத்தை அளிக்க கோரி பேரணி செல்லவிருந்தோம். ஆனால் போலீசார் அதை தடுத்தி நிறுத்தியதோடு, கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே வர முடியாத படி சிறைபிடித்துள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பதட்டமான சூழல் நிலவுகிறது. என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details