சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் முதன்முறையாக திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ‘நரை எழுதும் சுயசரிதம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜி&கே வாஹினி புரொடக்ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.
பல்வேறு சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் விருதுகளை அள்ளிய ‘நரை எழுதும் சுயசரிதம்’ திரையுலகினர் உள்ளிட்ட தரப்பினரின் பாராட்டுகளை ஏற்கெனவே பெற்றுள்ளது. தற்போது, ரசிகர்களின் பார்வைக்காக சோனி லிவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மௌலி, பிரவீன் ராஜா, ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வாழ்வின் அழகிய, உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக அமைந்துள்ளது.