நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக உள்ளது. இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நடிகர் மம்மூட்டிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சலி மற்றும் இரும்பல் இருந்ததன் காரணமாகப் பரிசோதனை செய்ததில் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.