தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல தெலுங்கு பட இயக்குநர் மரணம் - மகேஷ் காத்தி மறைவு

சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த தெலுங்கு பட நடிகர் மகேஷ் காத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ் காத்தி
மகேஷ் காத்தி

By

Published : Jul 10, 2021, 8:16 PM IST

தெலுங்கு திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவராக வலம்வந்தவர் நடிகர் மகேஷ் காத்தி.

இவர் சமீபத்தில் நெல்லூரிலிருந்து தனது காரில் ஹைதராபாத் சென்றுள்ளார். அப்போது லாரி மீது இவர் வாகனம் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து படுகாயமடைந்த மகேஷ், கடந்த இரண்டு வாரங்களாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 10) அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவு சக கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீரமே வாகையைச் சூடும் - ஃபர்ஸ்ட் லுக் குறித்து கமல்

ABOUT THE AUTHOR

...view details