தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு சமீபத்தில் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு சிலர் அவருக்கு ஹைதராபாத்தில் வைத்து சிகிச்சை செய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் அவருக்கு எங்கு அறுவைச் சிகிச்சை செய்யவுள்ளது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த செய்தியை அறிந்த மகேஷ் பாபு ரசிகர்கள், அவர்கள் விரைவில் நலம் பெறவேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாக டவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால் அவர் நடித்துவந்த 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஓடிடியில் சாதனை படைக்கும் அரண்மனை