தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காதலியை கரம்பிடித்த மகத் - நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிம்பு! - simbu visits Mahat marriage

நடிகர் சிம்பு தனது நண்பரும், நடிகருமான மகத் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காதலியை கரம்பிடித்த மகத்: நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிம்பு!
காதலியை கரம்பிடித்த மகத்: நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிம்பு!

By

Published : Feb 1, 2020, 9:49 PM IST

தமிழ் சினிமாவில் வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த மகத், அஜித்தின் மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரும், சக போட்டியாளரும், நடிகையுமான யாஷிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த மகத்தின் காதலியும், மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ரா, மகத்துடன் பிரேக்அப் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மகத், பிராச்சியை சமாதானபப்டுத்தினார் . இதையடுத்து இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

காதலியை கரம்பிடித்த மகத்

இந்த நிலையில் இன்று காலை மகத்துக்கும், பிராச்சி மிஸ்ராவுக்கும் சென்னையில் உள்ள மாமல்லபுரம் பீச் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் இருவீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி நடிகர் சிம்பு நேரில் சென்று தனது நண்பர் மகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளை நிற வெட்டி சட்டையில் சென்றுள்ள சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் 'அட்ராங்கி ரே' - லேட்டஸ்ட் அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details