தமிழ் சினிமாவில் 'மங்காத்தா', 'ஜில்லா', 'வந்தா ராஜாவாதான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். . நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமானர். மஹத் தற்போது 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மஹத் தனது காதலியும் மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது மனைவி பிராச்சி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த மஹத், வளைகாப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.