நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில்பிரதமர் மோடியையும், சீன பிரதமரையும் இணைத்து கேலி செய்வது போன்று காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
காங்கிரசுக்கு நடிகர் மாதவன் கண்டனம் - காங்கிரஸ் கட்சி
சென்னை: பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் மாதவன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
![காங்கிரசுக்கு நடிகர் மாதவன் கண்டனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2705282-559-be576855-915b-484c-b84f-6fc55f80d144.jpg)
நடிகர் மாதவன்
இந்த பதிவை பார்த்த நடிகர் மாதவன் தனதுகண்டனத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இது நல்ல ரசனை இல்லை. அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் மோடி நமது நாட்டின் பிரதமர். அவரை குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த காணொளி வெளியிட்டுள்ளீர்கள் .இது நகைப்புக்குரியதாக இல்லை. உங்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
கண்டனத்திற்குரிய வீடியோ