தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாதவனின் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' திரைப்பட ட்ரெய்லருக்கு துபாயில் வரவேற்பு! - நடிகர் மாதவன்

நடிகர் மாதவன், இயக்கத்தில் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் மிக உயரிய வரவேற்பைப் பெற்றது.

மாதவனின் ‘ராக்கெட்ரி  - தி நம்பி எஃபெக்ட்’ திரைப்பட ட்ரைலருக்கு துபாயில் வரவேற்பு!
மாதவனின் ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’ திரைப்பட ட்ரைலருக்கு துபாயில் வரவேற்பு!

By

Published : Mar 23, 2022, 8:05 PM IST

துபாய் எக்ஸ்போ 2022வில் திரையிடப்பட்ட நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பிரமாண்டமான ட்ரெய்லரைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களுடன் உரையாடுவதற்காக ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் மேடை ஏறியதும் அவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.

'மாதவன் பொறியாளர் என்பதால், என் கதையைச் சொன்னேன்':இந்த உரையாடல் நிகழ்வின்போது, ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், நடிகர் மாதவனிடம் இப்படத்தின் கதையைச் சொல்ல வேண்டும் என்றபோது உங்கள் கருத்து எவ்வாறு இருந்தது என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு அவர், 'பொறியியல் துறைசார் அறிவின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன்.

அந்தவகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது. என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் APJ அப்துல் கலாமின் உயிரைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சிகளை, அந்த சம்பவத்தை நான் விளக்கத் தொடங்கிய நேரத்தில், மாதவன் நான் உச்சரித்த வார்த்தையில் 'வளிமண்டல அழுத்தத்தில் சமநிலையின்மை' என்ற பதத்தை உடனடியாக புரிந்துகொண்டார். அவரது இயல்பிலேயே உள்ளார்ந்த பகுதியாக பொறியியல் பற்றி நிறைய அறிந்திருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது' எனத் தெரிவித்தார்.

கவுரவத்தோற்றத்தில் சூர்யா, ஷாருக்:'ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அவர் உளவு ஊழலில் தவறாக குற்றம்சாட்டப்பட்டு அதில் சிக்கி, பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.

நம்பி நாராயணன் பாத்திரத்தில் கதாநாயகனாக மாதவன் நடித்துள்ளார். சிம்ரன், ரஜத் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், கார்த்திக் குமார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் இந்திய திரைத்துறைப் பிரபலங்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத்தோற்றங்களில் நடித்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் 2022 ஜூலை 1 திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க:'ஜென்டில்மேன் 2' படத்தின் கதாநாயகி யார்? - சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details