தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அதற்கு திரையுலக பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. இதற்கிடையில் கடந்த மாதம் 25ஆம் தேதி மாதவனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கரோனாவிலிருந்து மீண்ட மாதவன்! - மாதவன் படங்கள்
சென்னை: நடிகர் மாதவன் தான் கரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

மாதவன்
இந்நிலையில் தனக்கு மீண்டும் எடுக்கப்பட்ட கரோனா சோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்ததாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், "எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. வீட்டில் அம்மா உள்பட அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்று சோதனையில் வந்துள்ளது. கடவுள் அருளால் நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். கரோனாவில் இருந்து மீண்டாலும், தடுப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.