தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பன்னிகுட்டி'யை தேடும் யோகி பாபு - புதிய ட்ரெய்லர் - பன்னிகுட்டி படம் வெளியாகும் தேதி

யோகி பாபு - கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள 'பன்னி குட்டி' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

pannikutty
pannikutty

By

Published : Jan 27, 2020, 8:39 PM IST

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. இவர் தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கருணாகரனுடன் இணைந்து நடிக்கின்ற படம் 'பன்னிகுட்டி'. அனுசரண் முருகையா இப்படத்தை இயக்குகிறார். 'ஆண்டவன் கட்டளை', '49-0' ஆகிய படங்களில் இசையமைத்த கிருஷ்ண குமார் (K) இப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 'கிருமி' படத்திற்குப் பிறகு அனுசரணும் இவரும் இரண்டாவது முறையாக இணையும் படம்.

இப்படத்தில் சிங்கம் புலி, திண்டுக்கல் ஐ. லியோனி, டி.பி. கஜேந்திரன், லக்ஷ்மி பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை மாதவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபுவும் கருணகாரனும் ஒரு வெள்ளை பன்னிகுட்டியை தேடும் பணியில் இறங்குகின்றனர். அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் நகைச்சுவையாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க: யோகிபாபுவின் அப்பா-மகன் வேடம் 'டக்கர்'!

ABOUT THE AUTHOR

...view details