தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒலிம்பிக்கிற்குத் தயாராகிவரும் மகனுக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற மாதவன்! - actor madhavan files to Dubai

தனது மகனின் கனவை நனவாக்கும்விதமாக அவரை உற்சாகப்படுத்த நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் துபாய்க்குச் சென்றார்.

மாதவன்
மாதவன்

By

Published : Dec 20, 2021, 2:43 PM IST

Updated : Dec 20, 2021, 3:12 PM IST

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பன்னாட்டு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களைப் பெற்றுள்ளார். இது குறித்து மாதவன் அளித்த பேட்டியில், "கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் நானும், எனது மனைவியும் மகன் வேதாந்துடன் துபாயில் இருக்கிறோம்.

இங்கு வேதாந்தால் சிறந்த நீச்சல் குளங்களில் பயிற்சி பெற முடியும். வேதாந்த் தனது ஒலிம்பிக் போட்டிக்காகத் தயாராகிவருகிறார். அவருக்குத் தேவையான உதவிகளை நானும், எனது மனைவி சரிதாவும் செய்துவருகிறோம்

இதுவரை உலக அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து, வேதாந்த் எனக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். சுற்றிலும் உள்ளவர்களை நன்றாக கவனித்துக் கொள்வதற்கு உங்கள் பிள்ளைகளைப் பழக்கப்படுத்துங்கள்.

குறிப்பாக உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களைக் கவனித்துக் கொள்ள பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். வேதாந்த் சமீபத்தில் நடந்த பன்னாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்பு தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், வேதாந்த் தங்கப் பதக்கமும், தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 20, 2021, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details