சென்னை: மனைவியின் பிறந்தநாளுக்கு ஸ்வீட் மெசேஜ், செஃல்பி புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் மாதவன்.
சாக்லெட் பாயாக அலைபாயுதே படத்தில் அறிமுகமானபோதிலும் அப்போதே திருமணம் ஆனவர்தான் நடிகர் மாதவன் என்பதை, பலர் பின் தெரிந்த பிறகு ஷாக்கானவர்கள் அதிகம்.
தன் மனைவி சரிதா மீது தீராக காதல் கொண்டுள்ள அவர், பல பேட்டிகளில் தனது வெற்றி குறித்து பேசும்போது மறக்காமல் தனது மனைவியின் பெயரை குறிப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், அக்டோப்ர் 15ஆம் தேதி தன் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்வீட் மெசேஜ், செஃல்பி புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார் மாதவன்.
அதில், இனி வரும் வாழ்நாளிலும் இதே போன்று இன்னும் பிரகாசமான உன்னை சிரிக்க வைப்பேன் என நம்புகிறேன். எங்களது நன்மைக்காக நீண்ட ஆயுளும், அற்புதமான வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன். ஏனென்றால் உன்னைச் சார்ந்த நாங்கள் (குடும்பம்) உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாதவனின் இந்த க்யூட் வாழ்த்துக்கு பலரும் லைக் செய்ததுடன், மாதவன் மனைவிக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.