தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராஜாவுக்கு ராஜாடா' படத்தில் அப்பாவாக நடிக்கும் கிஷோர்! - நடிகர் கிஷோர் லேட்டஸ் செய்திகள்

சென்னை: வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்த கிஷோர் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் 'ராஜாவுக்கு ராஜாடா' என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.

kishore
kishore

By

Published : Mar 18, 2021, 6:25 PM IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகரான கிஷோர், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்தவொரு கதாபாத்திரமானாலும் தன் தனிப்பட்ட திறமையால், அற்புத நடிப்பை வழங்கி அசத்துபவர்.

தற்போது நடிகர் கிஷோர் அறிமுக இயக்குநர் திரவ் இயக்கும் “ராஜாவுக்கு ராஜாடா” படத்தில் அற்புதமான அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். “ராஜாவுக்கு ராஜாடா” திரைப்படம் அப்பா மகள் உறவை அழகாக சொல்லும் ஒரு இசை திரைப்படமாக உருவாகவுள்ளது.

இயக்குநர் திரவ் இதற்கு முன்னால் தேசிய விருதை வென்ற “குற்றம் கடிதல்” படத்தில் இணை இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஜோதிகா நடிப்பில் உருவான “மகளிர் மட்டும்” படத்தில் திரைக்கதையில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் திரவ் கூறுகையில், " ராஜாவுக்கு ராஜாடா திரைப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படும் படமாகும். இதன் அடிநாதம் அன்பு மட்டுமே அண்டம் தேடும் என்பதாகும். இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அவரின் வாழ்க்கையின் ஏதாவதொரு பிரதிபலிப்பை படத்தில் கண்டிப்பாக காண்பார்கள்.

வலுவான கதாபாத்திரங்களை, தேர்ந்தெடுத்து செய்துவரும், நடிகர் கிஷோர் இப்படத்தில் அதற்கு நேர்மாறாக அன்பான ஒரு தந்தையாக, இயல்பான ஒரு குடும்பத்து எளிய மனிதனாக நடிக்கிறார். ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக நடிக்கிறார். இப்படத்தில் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், தனன்யா, ஜஷ்வந்த் மணிகண்டன், கண்ணன் பாரதி, பிரபாகரன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்" என்றார்.

சங்கர் ரங்கராஜன் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் திரவ் இப்படத்தின் பாடல்களையும் எழுதுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details