தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் கதிரின் தந்தையின் 53 வருடக் கனவை நனவாக்கிய ’தளபதி விஜய்’! - Latest Cinema news

நடிகர் கதிரின் தந்தை மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர் பெற்றோர்
கதிர் பெற்றோர்

By

Published : Jul 6, 2020, 12:24 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இதில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி உள்ளிட்ட ஏாளமானோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியாக இருந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் கதிர் தனது தந்தை லோகு, மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கதிர், அவரது தந்தை லோகு

அவரின் தாய், தந்தையரின் புகைப்படத்தை வெளியிட்டு, "இந்த இருவரின் பயணமும் எனக்கு ஊக்கமாக அமைந்திருந்தது. இன்று நான் நடிகனாக உங்கள் முன் இருப்பதற்குக் காரணம், இவர்களது ஆர்வமும் கனவும் தான்.

கதிரின் பெற்றோர்

கடந்த ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எனது தந்தையின் கனவு மாஸ்டர் படத்தில் நடித்தன் மூலம் நனவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details