பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் 'அந்தாதுன்'. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரேனா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தை தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் தமிழில் 'அந்தகன்' என்னும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இதில், பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகிபாபு, வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.