இது குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பல வளங்களை உடைய நாடு என உலக நாடுகள் போற்றும் வகையில் இந்தியா உள்ளது. அப்படி இருக்கும் வளங்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க இருக்கும் சட்டங்களே போதுமானதாக இல்லை. இப்படி இருக்கும்பட்சத்தில், தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ மேலும், நாட்டின் சுற்றுச்சுழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுத்த கடைக்குட்டி சிங்கம்! - சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுத்த கடைக்குட்டி சிங்கம்
சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுத்த கடைக்குட்டி சிங்கம்!
மேலும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலேயும் மட்டும் இருக்கிறது. தனது தாய் மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க...கரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல்