ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்துள்ள ஆந்தாலஜி படம் 'நவரசா'.
இப்படம் இன்று மதியம் 12.30 மணிக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி பலரும் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நவரசா படம் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நவராசாவுக்காக மணி சார் மற்றும் ஜெயேந்திராவுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் உழைக்கும் சக்தியின் நலனுக்காக நட்சத்திரங்கள், படைப்பாளிகள் ஒன்றாக வருவதைப் பார்க்க மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நவரசா திரைப்படத்தில் நடித்திருக்கும் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரையுலகினரின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஊதியம் இல்லாமல் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நவரசத்தால் ஒளிர்ந்த பிரமாண்டமான புர்ஜ் கலிஃபா!