நாம் தினமும் சாப்பிடும் உணவிலுள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து வருகிறோம். அதேபோல் நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
தற்போது உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது.
இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் நடிகர் கார்த்தி கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது.
இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைபடுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.