இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து- இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், எஸ்.ஆர். பிரபுவின் தயாரிப்பில் வெளியாகவுள்ளது ‘கைதி’ திரைப்படம்.
#KaithiUpdate - தீபாவளிக்கு முன்பே வெளியாகும் ‘கைதி’ - ‘கைதி’ ரிலீஸ்
சென்னை:தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘கைதி’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் என படத்தின் தயாரிப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆக்ஷன்-திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுதியாகவே இருந்துவருகிறது. இந்நிலையில், தீபாவளியன்று இத்திரைப்படம் வெளியாகுமென எதிர்பார்த்திருந்த வேளையில், அன்று வெளியாகும் என கருத்தப்பட்ட ‘பிகில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது ‘கைதி’ படம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே (October 25) வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ‘பிகில்’ படத்தின் வெளியீட்டு தேதியையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.