தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகனுக்கு தமிழ் பெயர் சூட்டிய கார்த்தி - கார்த்தி மகன்

சென்னை: நடிகர் கார்த்தி தனது மகனுக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

கார்த்தி
கார்த்தி

By

Published : Mar 17, 2021, 6:14 PM IST

நடிகர் கார்த்திக்கு ரஞ்சனியுடன் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு உமையாள் என பெயர் சூட்டப்பட்டது.

இதற்கிடையே கார்த்தி தனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது தனது மகனுக்குக் கந்தன் என்ற தமிழ்ப் பெயரை வைத்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மகனுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டிய கார்த்தி

அதில், “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மகனுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டியுள்ளதால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details