நல்ல நண்பரை இழந்துவிட்டேன் - நடிகர் கார்த்தி வேதனை! - நல்ல நண்பரை இழந்து விட்டேன்
ராமநாதபுரம்: நடிகர் ரித்தீஷ் நல்ல மனிதர் என்றும், நல்ல நண்பனை இழந்து விட்டதாகவும் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக்
ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் ரித்தீஷ் நேற்றுமுன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், நடிகர் சங்க பொருளாளரும், நடிகருமான கார்த்தி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.