தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பஞ்சவர்ணம் பாட்டியின் வெள்ளந்தி சிரிப்பு கண் முன்னே நிற்கிறது - கார்த்தி இரங்கல் - கார்த்தியின் பருத்திவீரன்

சென்னை: நடிகர் கார்த்தி அறிமுகமான 'பருத்திவீரன்' படத்தில் அவருக்கு அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

paruthi
paruthi

By

Published : May 7, 2021, 6:31 PM IST

Updated : May 7, 2021, 7:22 PM IST

அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியானப் படம் 'பருத்திவீரன்'. இந்த படத்தின் மூலம் நடிகர் காரத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஸ்டூடியோ கிரீன் தயாரித்த இந்த படத்தில் பிரியாமணி, சரணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்தப் படத்தில் கார்த்தியின் அப்பத்தாவாக பஞ்சவர்ணம் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், பஞ்சவர்ணம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Last Updated : May 7, 2021, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details