தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆண் குழந்தைக்கு தந்தையான கார்த்தி! - கார்த்தி லேட்டஸ்ட் செய்திகள்

சென்னை: நடிகர் கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கார்த்தி
கார்த்தி

By

Published : Oct 21, 2020, 2:24 AM IST

நடிகர் கார்த்தி 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு உமையாள் என்னும் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் இரண்டாவது குழந்தைக்கு தான் தந்தையாக போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் கார்த்தி. 2ஆவது முறையாக கர்ப்பமான ரஞ்சனி சில காலம் சென்னையில் தங்கியிருந்து பின் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தற்போது இவர்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாங்கள் ஒரு ஆண் குழந்தையுடன் தற்போது ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் வாழ்வில் புதிய அனுபவத்தை அறிவித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பெருமளவில் நன்றிக்கடன் பட்டுள்ளோம். சிறிய குழந்தைக்கு உங்களின் எல்லா ஆசீர்வாதங்களும் தேவை. நன்றி கடவுளே என கார்த்தி பதிவிட்டுள்ளார்.

இரண்டாவது குழந்தைக்கு தந்தையான கார்த்திக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கார்த்தி தற்போது 'சுல்தான்' படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details