இசைஞானி இளையராஜா இன்று (ஜூன்.02) தனது 78ஆவது பிறந்தநாளைக் கொண்டுகிறார். இதனையடுத்து அவருக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
’சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர் இளையராஜா’ - கமல்ஹாசன் - இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Ilaiyaraaja
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இசைக்கு இளைஞர் இளையராஜா. என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.