தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பா.இரஞ்சித்துடன் கூட்டணி வைக்கும் கமல்ஹாசன்...? - நடிகர் கமல்

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kamal
Kamal

By

Published : Nov 9, 2021, 10:54 AM IST

நடிகர் கமல்ஹாசன் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

'விக்ரம்' படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் ஃபக்த் பாசிலை வைத்து 'மாலிக்' படத்தை இயக்கிய மகேஷ் நாராயணுடன் கமல் 'தேவர் மகன் 2' படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான கதையைக் கமல் எழுதி வருவதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

இப்போது இந்த படங்களையெல்லாம் முடித்த பின் கமல் பா.இரஞ்சித் இயக்கவுள்ள புதியப்படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான கதை எழுதும் பணியில் இரஞ்சித் இருப்பதாகவும் கதை எழுதி முடித்த பின் கமலை சந்தித்துக் கதை விவாதம் நடக்கும் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.இரஞ்சித் படத்திற்குப் பின் கமல் வெற்றிமாறன் இயக்கவுள்ள படம் ஒன்றில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது எனத் தகவல்கள் தெரிகின்றன.

இதையும் படிங்க: 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details