இசைஞானி இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். தற்போது அங்கிருந்தே புதிய படங்களுக்கு இசையமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று (செப்.20) நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோடம்பாக்கத்தில் வைத்து இளையராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.