தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாளை கமல் ஹாசன் வீடு திரும்ப வாய்ப்பு! - நடிகர் கமல் ஹாசன் சமீபத்திய செய்திகள்

சென்னை: தனியார் மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிமதிக்கப்பட்ட கமல்ஹாசன் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

actor kamal haasan
கமல் ஹாசன்

By

Published : Jan 21, 2021, 9:35 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" எனும் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார். இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரைக்காக அவரது தொண்டர்கள் தயாரான நிலையில், தனது காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும், தனக்கு ஓய்வு தேவை என்றும் கடந்த 17ஆம் தேதி அவர் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து அவர் போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதியானார். கடந்த 19ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனிடையே கமல் ஹாசன் நலமுடன் இருக்கிறார் என அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ’கமல் ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார். அடுத்ததாக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதும், அதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றால் நாளை வீடு திரும்புவார்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details