தமிழில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'நாளை நமதே', 'நம்மவர்', 'மறுபக்கம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர், கே.எஸ். சேதுமாதவன் (90). இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.
கே.எஸ். சேதுமாதவன் வயது மூப்பின் காரணமாக இன்று (டிசம்பர் 24) காலை காலமானார். இவரின் உடலுக்குப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிலையில் இவரது மறைவு குறித்து கமல் ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ். சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.
மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச் சாதனைகளால் என்றென்றும் நினைவுகூரப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இறப்பிலும் எம்ஜிஆருடன் என்ன ஒரு ஒற்றுமை! 'நாளை நமதே' இயக்குநர் காலமானார்