இயக்குநர் பா.ரஞ்சித்தின் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் வந்த அனைத்துக் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகின்றன.
படத்தின் ஹீரோ ஆர்யாவின் கபிலன் கதாபாத்திரம், பசுபதியின் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் ஆகியவற்றைத் தாண்டி, டாடி, டேன்சிங் ரோஸ், வேம்புலி என பிற கதாபாத்திரங்களும், அக்கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்களும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இப்படத்தில் ஆர்யாவுக்கு எதிராக ஆஜானுபாகுவான பாக்சராகத் தோன்றி படத்தின் இறுதிவரை இடம்பெற்ற வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜான் கோக்கனுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.
மேலும் இதற்கு முன் அவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்த வீரம், ஒஸ்தி, கேஜிஎஃப் படங்களின் காட்சிகளையும் அவரது ரசிகர்கள் தேடி எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், பாகுபலி படத்திலும் காளகேயர்களில் ஒருவராக ஜான் கோக்கன் நடித்துள்ளார்.