தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அஜித்துடன் செலவழித்த நேரம் என் வாழ்க்கைக்கான பாடம்: 'வேம்புலி' ஜான் கொக்கென் - சார்பட்டா பரம்பரை

ஆர்யாவின் 'சார்பட்டா' படத்தில் 'வேம்புலி' கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பை, அஜித்துக்குச் சமர்ப்பிப்பதாக நடிகர் ஜான் கொக்கென் தெரிவித்துள்ளார்.

john kokken
john kokken

By

Published : Jul 22, 2021, 6:39 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'.

வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக ஆர்யா உடற்பயிற்சி மேற்கொண்டு, தனது உடலைக் கட்டுமஸ்தாக மாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சந்தோஷ் சிவன் இசையமைத்த இந்தப்படத்தை கே9 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக, இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்றிரவு (ஜூலை.21) வெளியானது.

இப்படத்தின் ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக், கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படமும் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் நல்ல வரேவற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் ஆர்யா கதாபாத்திரம் மட்டுமல்லாது வேம்புலி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் வேம்புலி காதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கென், அஜித்துடன் 'வீரம்', 'பாகுபலி', 'கேஜிஎஃப் பகுதி 1' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

'சார்பட்டா' படத்தில் வேம்புலி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை, அஜித்துக்கு சமர்ப்பிப்பதாக ஜான் கொக்கென் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நன்றி தல அஜித் சார். நான் என்னையே நம்புவதற்கு எப்போதும் நீங்கள் தான் உத்வேகம் அளித்து உற்சாகப்படுத்தினீர்கள்.

'வீரம்' படப்பிடிப்பின்போது உங்களுடன் நான் செலவழித்த நேரம், என் வாழ்க்கைக்கான பாடமாக மாறியது. ஒவ்வொரு நாளும் கடின உழைப்பைச் செலுத்த நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்.

அதுமட்டுமல்லாது நல்ல மனிதராக இருக்கவும் நீங்களே எனக்கு கற்றுத் தந்தீர்கள். வேம்புலி கதாபாத்திரத்தை நான் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் சார்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சார்பட்டா டிரெய்லரை வெளியிட்ட சூர்யா: பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details