ஜீவா, வருண், ரியா சுமன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சீறு'. இப்படம் குறித்து நடிகர் ஜீவா பேசுகையில், தான் இதுபோன்ற நிறைய சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சிகளில் அமர்ந்திருக்கும்போது சிறு தடுமாற்றம் ஏற்படும் என்றும் கூறினார். ஆனால் அந்த மேடை அப்படி இல்லாமல் நல்லதை செய்ததைப்போல் நிறைவாக உள்ளது என்றார்.
'83' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே 'சீறு' படத்தின் கதை தனக்கு சொல்லப்பட்டது என்றும் சரியான திட்டமிடுதல் இருந்ததால் '83' படத்திலும் சிக்கலில்லாமல் நடிக்க முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.