தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - படக்குழுவினர்ட

ஜெயம் ரவி நடித்து வரும் 'கோமாளி' திரைப்படத்தின் புதிய அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயம் ரவி

By

Published : Jul 9, 2019, 9:30 AM IST

'அடங்க மறு' படத்தின் வெற்றிக்கு பிறகு கதை விவாதங்களில் ஈடுபட்டுவந்த ஜெயம் ரவி, அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் 'கோமாளி' படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே பாலிவுட் நடிகை கவிதா ரதேஷ்யம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வித்தியாசப்படுத்தி காட்ட முயலும் ஜெயம் ரவி இப்படத்தில் முதல் முறையாக ஒன்பது வேடங்களில் நடிக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசனை தொடர்ந்து, ஜெயம் ரவி இதனை சவாலாக ஏற்று நடித்து வருகிறார். இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவரை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. பள்ளி சிறுவன், காவல்துறை அதிகாரி, கல்லூரி மாணவன், வயது முதிர்ந்த கிழவர், 35 வயது நிறைந்த இளைஞர் உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களே இதுபோன்ற படங்களில் நடிக்க தயங்குகின்றனர். ஜெயம் ரவியால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது என கோலிவுட் வட்டாரமே அவரை வியந்து பாராட்டுகிறது. இப்படத்திற்காக, ஜெயம் ரவி 20 கிலோ எடையைக் குறைத்துள்ளாராம். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் கோமாளி படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கோமாளி திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சினிமா ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details