பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'கோமாளி'. இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையை நகைச்சுவையுடன் கிண்டல் செய்யும் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்வது போல் இடம்பிடித்த காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
90ஸ் கிட்ஸை குஷிப்படுத்தும் 'கோமாளி' படக்குழு - 90s kids
'கோமாளி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் 90ஸ் கிட்ஸின் ஞாபகங்களை தட்டியெழுப்பும் வகையில் பாட்டுப் புத்தகமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
![90ஸ் கிட்ஸை குஷிப்படுத்தும் 'கோமாளி' படக்குழு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4110279-thumbnail-3x2-comali.jpg)
மேலும், 16 வருடம் கோமாவில் இருக்கும் ஜெயம் ரவி 90கிட்ஸ் ஆக வருகிறார். இப்படத்தில் இடம்பிடித்த பாடல்கள் 90ஸ் கிட்ஸை ஞாபகப்படுத்துகின்றன. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் புத்தக வடிவில் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே பாடல்கள் புத்தகங்களாக வந்து இளைஞர்கள் மனதை இசையால் நனைய வைத்தது. இதனால் பாடகர்களாக ஜொலித்தவர்கள் பலரும் உண்டு. ஆனால் இன்று இது அடியோடு மறைந்துவிட்டன.
பாட்டுப் புத்தகத்தை வாங்கி படிக்கும் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் வெறுமனே வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாத ரசனை அது. இந்த இனிமையான நினைவுகளை ஞாபகப்படுத்தும் விதமாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி 'கோமாளி' படத்தின் பாட்டுப் புத்தகத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த 90ஸ் கிட்ஸ் பாடல் வரிகளால் கோமாளி படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.